×

துப்பறியும் மோப்ப நாய் ஜெர்ரி உயிரிழப்பு

மொடக்குறிச்சி,ஏப்.18: ஈரோட்டில் துப்பறியும் போலீஸ் மோப்ப நாய் ஜெர்ரி உடல் நலக் குறைவால் நேற்று காலை உயிரிழந்தது. ஈரோட்டில் துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் ஜெர்ரி என்ற ஜெர்மன் செப்பேடு வகையைச் சேர்ந்த நாய் இருந்து வந்தது. ஜெர்ரிக்கு மூன்று வயது ஆகும். கடந்த ஒரு வாரமாக ஜெர்ரி உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தது. இதனை அடுத்து மோப்பநாய் படை பிரிவு காவலர்கள் ஈரோடு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஜெர்ரி உயிரிழந்தது.

குற்றம் மற்றும் திருட்டு வழக்கிற்கு உதவியாக இருந்த மோப்பநாய் உயிரிழந்ததை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து சோகத்துடன் காணப்பட்டனர். தகவல் அறிந்த மாவட்ட குற்ற பதிவேடு பிரிவு டிஎஸ்பி சேகர் மோப்ப நாய்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவருடன் சக போலீசாரும் ஜெர்ரிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை அடுத்து மாவட்ட போலீஸ் எஸ்பி., சசிமோகன் உத்தரவுபடி ஜெர்ரியை ஆனைக்கல் பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஈரோடு துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவின் நாய்ப்பட்டி கட்டடம் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் அரசு மரியாதையுடன் ஜெர்ரியை நல்லடக்கம் செய்தனர்.

The post துப்பறியும் மோப்ப நாய் ஜெர்ரி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Jerry ,Modakurichi ,Gerry ,Erode ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பள்ளி...