×

கிரிவல பாதை சீரமைப்பு பணிகள் தொடக்கம்

சேந்தமங்கலம், ஏப்.18: எருமப்பட்டி தலமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கிரிவலப் பாதை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. எருமப்பட்டி ஒன்றியம், வடவத்தூர் தலமலையில் பிரசித்தி பெற்ற சஞ்சீவிராய பெருமாள் கோயில் உள்ளது. 2700 அடி உயரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு, பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய விசேஷ தினங்களில், ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தரிசனம் செய்கின்றனர். தலமலையை சுற்றி 27 கி.மீ தூரம் கிரிவலம் செல்லும் பாதை உள்ளது. கடந்த 2019 ஆண்டு தலமலை சேவா சங்கம் சார்பில், சீரமைக்கப்பட்டு பக்தர்கள் கிரிவலம் சென்று வந்தனர். கடந்த ஆண்டு அதிக மழை பெய்த காரணத்தால், கிரிவல பாதையில் மீண்டும் முட்புதர்கள் அதிக அளவில் முளைத்து விட்டது.


இதனால் பக்தர்கள் கிரிவலம் செல்லவில்லை. இந்நிலையில், கிரிவல பாதையை சீரமைக்க பூமி பூஜை நடந்தது.இதில் சங்க உயர்மட்ட குழு உறுப்பினர் சிவராஜ், அறங்காவலர் கலைச்செல்வன், உறுப்பினர்கள் சீனிவாசன், தர்மகத்தா நந்தகோபால், அறங்காவலர் அக்கினி ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கிரிவல பாதை சீரமைப்பு பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Kariwala ,Senthamangalam ,Erumapatti ,Thalamalai ,Sanjeeviraya ,Perumal Temple ,Erumapatti Union ,Vadavathur ,
× RELATED 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; தொழிலாளி கைது