×

முயல் வேட்டை திருவிழாவையொட்டி குதிரை வாகனத்தில் மாரியம்மன் வீதியுலா

பாடாலூர், ஏப்.18: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் முயல் வேட்டை திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி விமரிசையாக நேற்று நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் முயல்வேட்டை திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் முயல் வேட்டை திருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமி வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது. இதே போல இந்தாண்டும் இரவு மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் மாரியம்மன் வீதி உலா மாரியம்மன் கோயில் முன்பு தொடங்கி முக்கிய வீதியின் வழியாக வீதிஉலா நடைபெற்றது. வீதி உலாவின் போது பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தேங்காய், வாழைப்பழம் போன்ற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

The post முயல் வேட்டை திருவிழாவையொட்டி குதிரை வாகனத்தில் மாரியம்மன் வீதியுலா appeared first on Dinakaran.

Tags : Rabbit Hunting Festival ,Mariamman Veedyula ,Badalur ,Mariamman Swami ,Alathur ,Natarmangalam ,Mariamman Vetiula ,
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...