×

உடன்குடி தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கில்சம்பந்தப்பட்ட அனைவரையும்கைது செய்ய வேண்டும்

தூத்துக்குடி, ஏப். 18: உடன்குடி பேரூராட்சி தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அவரது மனைவி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தற்கொலை செய்து கொண்ட பேரூராட்சி தூய்மை பணியாளர் சுடலைமாடனின் மனைவி தங்கம்மாள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உடன்குடி பேரூராட்சியில் எனது கணவர் சுடலைமாடன் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். பணி மூப்பு அடிப்படையில் அவருக்கு பதவி உயர்வு வந்தபோது தற்போதைய பேரூராட்சி தலைவரின் மாமியாரும், முன்னாள் தலைவருமான ஆயிஷா கல்லாசி எனது கணவரிடம் பணம் கேட்டுள்ளார். எனது கணவர் பணம் கொடுக்காததால் அவரை பழிவாங்கும் நோக்கில் பல்வேறு இடையூறு செய்தனர்.

கடந்த 17.3.2023 அன்று பணிக்கு சென்ற எனது கணவரை சாதி பெயரை கூறி அவதூறாக பேசியதால், சுடலைமாடன் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். தற்போதைய தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர். திருச்செந்தூர் ஏஐடியுசி ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்க செயலாளர் ஆண்டி தலைமையில் திருச்செந்தூர் சன்னதி தெரு ஆட்டோ நிறுத்தத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கலெக்டர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சன்னதி தெரு ஆட்டோ நிறுத்தத்தில் 15 பேர் ஆட்டோக்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம்.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் ஒருவரது சகோதரர் தனது 2 ஆட்டோக்களை இங்கு நிறுத்தி எங்கள் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து கேட்டால் எங்களை மிரட்டி வருகிறார். எனவே, கலெக்டர் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரி வடக்குத்தெருவை சேர்ந்த சங்கரேஸ்வரி, கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் கார்த்திக் கடந்தாண்டு பிப்.4ம் தேதி காலமானார். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மிகவும் ஏழ்மை நிலையில் வசித்து வரும் எனக்கு ஆதரவற்ற விதவை சான்றிழ் தருவதற்கு சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த 6 மாதங்களாக இழுத்தடித்து வருகிறார்கள். எனவே எனக்கு ஆதரவற்றவர் என்கிற சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post உடன்குடி தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கில்
சம்பந்தப்பட்ட அனைவரையும்
கைது செய்ய வேண்டும்
appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Ebenkudi ,Dinakaran ,
× RELATED இன்னொரு முட்டை கொடுக்க மறுத்த சமையல்...