×

செக் மோசடி வழக்கில்கயத்தாறு முதியவருக்கு6 மாதம் சிறை

கோவில்பட்டி, ஏப். 18: கோவில்பட்டி ராஜிவ் நகரைச் சேர்ந்தவர் முருகன் (64). கயத்தாரில் பைக் ஷோரூம் வைத்துள்ளார். இவரிடம், கயத்தாறைச் சேர்ந்த மாடசாமி (65) என்பவர் கடந்த 2020ம் ஆண்டு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினார். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து முருகன் கேட்ட போது, மாடசாமி கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் செக் கொடுத்தார். ஆனால் அதனை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதையடுத்து முருகன், கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் மாடசாமி மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். நேற்று வழக்கை நீதிபதி முகம்மது சாதிக் உசேன் விசாரித்து மாடசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனையும், கடன் தொகையை ரூ.8 லட்சமாக செலுத்த வேண்டும், தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

The post செக் மோசடி வழக்கில்
கயத்தாறு முதியவருக்கு
6 மாதம் சிறை
appeared first on Dinakaran.

Tags : Jayataru Elder ,Govilbatti ,Murugan ,Govilpatti Rajiv ,Kayatar ,Kayatarai ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்