×

செய்யூர் அருகே ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஆண்டு விழா: மாணவர்கள் நடனமாடி அசத்தல்

செய்யூர்: நாங்களத்தூரில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் ஆண்டு விழாவில் மாணவ, மாணவியர் பங்கேற்று அசத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் நாங்களத்தூர் ஊராட்சியில், ஒன்றிய ஆரம்பப்பள்ளி 1978ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 7 மாணவர்களுடன் துவங்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 30 மாணவர்கள் படிக்கின்றனர். முதல் முறையாக இந்த பள்ளியில் ஆண்டு நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் சிற்றரசு தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய கவுன்சிலர் தமிழினி கலந்து கொண்டார். விழாவில் மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, மாணவர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நாடகங்கள் நடந்தது. முடிவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள் தேவகி, செல்வம், பெற்றோர் – ஆசிரியர் கழக தலைவர் ஆனந்தி, முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் சத்துணவு அமைப்பாளர் சாந்தி நன்றி கூறினார்.

The post செய்யூர் அருகே ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஆண்டு விழா: மாணவர்கள் நடனமாடி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Panchayat Union Primary School Annual Celebration ,Seyyur ,Panchayat Union Primary School ,Nangalathur ,Chengalpattu District ,Chittamur Union ,Panchayat Union Primary School Annual Festival ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...