×

தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை: அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கு இடையிலான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கு இடையிலான 2023ம் ஆண்டு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. போட்டி இன்றும் நடக்கிறது.

விழாவில், அமைச்சர்கள் சி.வி.கணேசன், பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி, பரந்தாமன் எம்எல்ஏ, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தொழிற்பயிற்சி நிலைய வரலாற்றில் இல்லாத வகையில், உலகத்தரத்திலான விளையாட்டு அரங்கமான ஜவஹர்லால் நேரு அரங்கத்தில், சிறப்பான ஏற்பாட்டுடன், தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு நடந்து வரும், மாநில விளையாட்டு போட்டியை விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்த இரண்டு நாள் போட்டிகளில் 471 ஆண் பயிற்சியாளர்களும், 246 பெண் பயிற்சியாளர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இவர்களுக்கென தனித்தனியாக பூப்பந்து, கைப்பந்து, கால்பந்து, கபடி, வளையப்பந்து, சதுரங்கம், சுண்டாட்டம் – ஒற்றையர், இறகுப்பந்து – ஒற்றையர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 4X100 மீட்டர் தொடர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், சிலம்பம், கராத்தே ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெறும் பயிற்சியாளர்களுக்கு இரண்டாம் நாள் போட்டிகள் முடிந்ததும் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

The post தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Training ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi ,Udhayanidhi Stalin ,
× RELATED அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக...