×

நெல்லையில் பரபரப்பு பேராசிரியர் மனைவியை மிரட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது: கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்கு

நெல்லை: நெல்லையில் பேராசிரியர் மனைவியை மிரட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகியை கந்து வட்டி சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சேர்ந்தவர் பாலகுமரன் (50). இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீதா (42). பாலகுமரனுக்கும், சுத்தமல்லியைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி தென் மண்டல தலைவர் ராஜபாண்டியனுக்கும் பழக்கம் இருந்தது. இதை பயன்படுத்தி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜபாண்டியனிடம் ரூ.3 லட்சத்தை பாலகுமரன் கடன் வாங்கினார்.

இதற்காக மாதம் ரூ.30 ஆயிரம் வீதம் முதல் 2 மாதங்கள் வட்டியளித்த பாலகுமரன், 3வது மாதம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜபாண்டியன், பாலகுமரன் வீட்டுக்கு சென்று அவரது மனைவி கீதாவை அவதூறாக பேசி வட்டி கேட்டு மிரட்டியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் கீதாவை ராஜபாண்டியன் தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளை. போலீசில் கீதா புகார் செய்தார். இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கந்து வட்டி கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ராஜபாண்டியனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

The post நெல்லையில் பரபரப்பு பேராசிரியர் மனைவியை மிரட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது: கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Hindu People's Party ,Nella ,Nellai ,Dinakaran ,
× RELATED எம்ஜிஆரின் கனவுகளை பாஜக...