×

கரூர் அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை

கரூர்: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி (70). விவசாயி, கடந்த 13ம்தேதி காய்ச்சல் காரணமாக மனைவி லட்சுமியுடன் கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுநீரக தொற்று இருப்பதாக கூறி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். 2 நாட்களுக்கு பிறகு பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த முதியவர், நேற்று காலை 6 மணி அளவில் மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் பிளேடை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் அவர் அலறவே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதற்குள் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

The post கரூர் அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Karur Government Hospital ,Karur ,Karuppannaswamy ,Pudupalayam ,Kodumudi ,Erode district ,Dinakaran ,
× RELATED கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை