×

ரூ.364 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு

திருவள்ளூர்: தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக திருப்பாச்சூர் முதல் திருநின்றவூர் வரையிலான 17 கி.மீ தொலைவிற்கு ரூ.364 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் என்.எச். 205 தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் முதல் திருநின்றவூர் வரையில் நெடுஞ்சாலை அமைக்கும் இத் திட்டத்தில் என்.எச்.205 இன் திருப்பதி – திருத்தணி- சென்னை பிரிவின் தண்ணீர்குளம், தோசூர் மற்றும் செவ்வாப்பேட்டை புறவழி வழியாக செல்லும் 17 கி.மீ. அளவில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

திருப்பாச்சூர் முதல் திருநின்றவூர் வரையிலான இந்த திட்டமானது என்.எச்.205ன் பணியாகும். மீதமுள்ள 17 கிமீ நீளம் உள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையானது திருப்பாச்சூரில் தொடங்கி 43 கி.மீ முதல் வேப்பம்பட்டு 61 கிமீ வரை முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலையானது நன்கு வழிச்சாலையாகும். எதிர்காலத்தில் எட்டுவழிச்சாலையாக விரிவாக்கக்கூடிய வகையில் நான்கு மீட்டர் இடைநிலையுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டம் 14.182 கி.மீ. நீளம்கொண்ட சர்வீஸ் சாலையையும் கொண்டுள்ளது. இச்சாலையானது திருவள்ளூர் மற்றும் திருநின்றவூர் இடையேயான பயண நேரத்தை குறைக்கக் கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் திருவள்ளூர், திருநின்றவூர், காக்களூர், தண்ணீர்குளம், தொழுவூர், செவ்வாபேட்டை, அயத்தூர் மற்றும் வேப்பம்பட்டு ஆகிய பகுதிகள் புறவழிச்சாலையாக இணைக்கப்படஉள்ளது. இத்திட்டத்திற்கான செலவானது 364.21 கோடியாகும். மற்றும் இதன் கட்டுமான காலமானது இரண்டு ஆண்டுகளாகும். அதாவது செப்டம்பர் 2024க்குள் முடிக்கப்பட உள்ளது. தற்பொழுது இரண்டு பெரியபாலங்கள், மூன்று சிறிய பாலங்கள், மூன்று வாகன மேம்பாலங்கள் அமைக்கும் பணியில் தற்போது 1.5 கி.மீ. பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் 2 கி.மீ. திட்டசாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், புல்லரம்பாக்கம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக திருப்பாச்சூர் முதல் திருநின்றவூர் வரையிலான 17 கி.மீ. தொலைவிற்கு ரூ.364 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் என்.எச். 205 தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பணிகளை விரைந்து நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அப்பணிகளில் ஈடுபட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களோடு கலந்துரையாடி, அப்பணியாளர்களின் தங்குமிடம், உணவு மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் ஜனகுமாரன், தேசிய நெடுஞ்சாலை பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post ரூ.364 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : National Highway ,Thiruvallur ,Tirupachur ,Thirunandavur ,National Highway Department ,Dinakaran ,
× RELATED அத்திப்பட்டு தேசிய நெடுஞ்சாலை...