×

மெரினா லூப் சாலை ஆக்கிரமிப்பு விவகாரம் நீதிமன்றத்தில் மாநகராட்சி இன்று அறிக்கை தாக்கல்: மீனவர்கள், வியாபாரிகள் பதில் மனு

துரைப்பாக்கம்: சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில், மீன் கடைகள், உணவகங்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், இப்பகுதிக்கு வருபவர்கள் வாகனங்களை சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி விட்டு சென்று விடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என்றுறம் குற்ச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது, நீதிபதிகள் மெரினா கடற்கரை லூப் சாலையில் மேற்கு பகுதியில் 25 சதவீதம் சாலை, நடை பாதைகளால் ஆக்கிரமித்து மீன் கடைகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

பொது சாலைகளை ஆக்கிரமிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த சாலை மீன் கழிவு கொட்டுவதற்காக உள்ளதா. லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் 18ம் தேதிக்குள் (இன்று) மாநகராட்சி சார்பில், லூப் சாலையின் மேற்கு பகுதியில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த வாரம் முதலே மெரினா கடற்கரை லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். லூப் சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் அகற்றினர். ஆனால் கடைகள் அகற்றப்படுவதை அறிந்ததும் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டனர். அவர்கள் மீன் கடைகள் மற்றும் உணவகங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மாநகராட்சி அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஒரு வாரங்களாக லூப் சாலை போராட்டகளமாக மாறியுள்ளது. அதை மீறி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி, இன்று உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது. அதில் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள மக்கள் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. சாலைகளில் படகை நிறுத்தி போராட்டம் நடத்துகிறார்கள் என அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. மேலும், வியாபாரிகள், மீனவர்கள் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு அளிக்கப்படவுள்ளது.

The post மெரினா லூப் சாலை ஆக்கிரமிப்பு விவகாரம் நீதிமன்றத்தில் மாநகராட்சி இன்று அறிக்கை தாக்கல்: மீனவர்கள், வியாபாரிகள் பதில் மனு appeared first on Dinakaran.

Tags : Marina Loop ,Road ,Affair Court ,Chennai ,Marina ,Lighthouse ,Marina Loop Road Oaggressive Affair Court ,Dinakaran ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி