×

கான்வே 83, துபே 52, ரகானே 37 ரன் விளாசல் சூப்பர் கிங்ஸ் 226 ரன் குவிப்பு

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன் குவித்தது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. சென்னை அணியில் காயம் காரணமாக அவதிப்படும் மெகாலாவுக்கு பதிலாக மதீஷா பதிரணா இடம் பெற்றார். ருதுராஜ் கெயிக்வாட், டெவன் கான்வே இருவரும் சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். ருதுராஜ் 3 ரன் மட்டுமே எடுத்து சிராஜ் வேகத்தில் பார்னெல் வசம் பிடிபட்டார். அடுத்து கான்வேயுடன் ரகானே இணைந்தார். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தது. ரகானே 37 ரன் (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி டி சில்வா பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

இதையடுத்து, கான்வே – ஷிவம் துபே இணைந்து ஆர்சிபி பந்துவீச்சை பதம் பார்த்தனர். கான்வே 32 பந்தில் அரை சதம் அடித்தார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கான்வே 83 ரன் (45 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். துபே 52 ரன் (27 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) அடித்து பார்னெல் பந்துவீச்சில் சிராஜ் வசம் பிடிபட்டார். கான்வே – துபே ஜோடி 3வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கடைசி கட்டத்தில் ராயுடு 14 ரன், ஜடேஜா 10 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன் குவித்தது. மொயீன் அலி 19 ரன் (9 பந்து, 2 சிக்சர்), கேப்டன் தோனி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் சிராஜ், பார்னெல், விஜய்குமார் வைஷாக், மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 227 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் களமிறங்கியது.

The post கான்வே 83, துபே 52, ரகானே 37 ரன் விளாசல் சூப்பர் கிங்ஸ் 226 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Conway ,83 ,Dubey ,Rakhine ,Vlasal Super Kings ,Bengaluru ,IPL league ,Royal Challengers ,Bangalore ,Chennai Super Kings ,Dube ,Super Kings ,Dinakaran ,
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...