×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு களப்பணி: கலெக்டர் ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம்: பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு களப்பணி நடைபெறவுள்ளது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி 6 முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும். அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், கணக்கெடுப்பு களப்பணி 2023ம் ஆண்டின் ஏப்ரல் முதல் 2 வாரங்களிலும் மற்றும் மே இறுதி வாரத்திலும் நடைபெறவுள்ளது.

இக்கணக்கெடுப்பு பணியில், பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே, இக்கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், பொதுமக்கள் எவரேனும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை Mail ID – dpckanchi@yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கலாம்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு களப்பணி: கலெக்டர் ஆர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram District ,Kanchipuram ,Aarthi ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...