×

பத்திண்டா ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவர் கைது

சண்டிகர்: பத்திண்டா ராணுவ முகாமில் 4 வீரர்களைக் கொன்றதாகக் கூறப்படும் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் பத்திண்டா ராணுவ முகாமில் கடந்த 12ம் தேதி துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் முகம், தலையை மூடிக்கொண்டு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இதில் தமிழக வீரர்கள் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து ராணுவ முகாமை சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டு தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது. விசாரணையில் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பாக 28 குண்டுகளுடன் இருந்த துப்பாக்கி மாயமானதாகவும், ராணுவ முகாமில் நடைபெற்ற சம்பவம் பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

தற்போது பத்திண்டா ராணுவ முகாம் தாக்குதல் தொடர்பாக ராணுவ வீரர் தேசாய் மோகன் என்பவரை கைது செய்துள்ளனர். அங்குள்ள ஆயுதக் கிடங்கில் துப்பாக்கிகளை திருடி 4 வீரர்களை சுட்டுக்கொன்றது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து ராணுவ வீரர் தேசாய் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் போது உண்மையை ஒப்புக்கொண்ட குன்னர் தேசாய் மோகன், தன்னை உடல்ரீதியாக துன்புறுத்தியதால் அவர்களை சுட்டுக்கொன்றேன் என தேசாய் மோகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதை பத்திண்டா எஸ்பி குல்னீத் சிங் உறுதிப்படுத்தினார். அவரிடம், கொலைக்கான காரணத்தைக் கேட்டதற்கு, ‘ஊடகங்களுக்கு முன் அதை வெளியிட முடியாது. ஆனால் மோகனுக்கு 4வீரர்களுடன் தனிப்பட்ட விரோதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படை முகாமில் அடையாளம் தெரியாத 2 பேர் புகுந்ததாக அவர் கூறியது போலியான கற்பனை கதை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு முகாமில் திருடப்பட்ட இன்சாஸ் துப்பாக்கி, தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி குண்டு நிரப்பிய துப்பாக்கியை அவர் திருடியுள்ளார். தாக்குதலுக்கு பின்னர் அங்குள்ள கழிவு நீர் குழாயில் பதுக்கி வைத்துள்ளார். அங்கு இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் பயங்கரவாத கோணம் இல்லை. இருப்பினும் இந்திய ராணுவம் இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயல்களை அனுமதிக்காது. குற்றவாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ராணுவவீரர் மோகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்’ என்று குரானா தெரிவித்தார்.

The post பத்திண்டா ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pathinda Military Camp ,Chandikar ,Pathinda Army Camp ,Punjab ,Pattinda ,Patinda Military Camp ,Dinakaran ,
× RELATED வீடியோ கான்பரன்சிங் விசாரணை ஐகோர்ட்டுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்