×

13 நகரங்களில் வெயில் சதமடித்தது: ஈரோட்டில் அதிகபட்சமாக 106 டிகிரி; மாநிலம் முழுவதும் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை

சென்னை: ‘தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட 13 நகரங்களில் வெயில் சதமடித்தது. ஈரோட்டில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டியது. தமிழ்நாட்டில் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வருகிறது. பசிபிக் கடல் பகுதியில் நிலவும் எல்நினோ காரணமாக கடற்பரப்பில் வெப்பம் பரவி வருகிறது. அதன் காரணமாக கடல் பகுதியில் இருந்து வீசக் கூடிய குளிர்ந்த காற்று குறைவாக வீசுகிறது. தரைப்பகுதியில் நிலவும் வெப்பம், கடல் காற்றுடன் இணைந்து அதிக வெப்பத்தை வெளியிட்டு வருகிறது.

அதிகபட்சமாக நேற்று ஈரோட்டில் 41 டிகிரி செல்சியஸ் (106 டிகிரி பாரன்ஹீட்) அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை, கோவை, தர்மபுரி, கரூர் பரமத்தி, மதுரை, நாமக்கல் உள்பட 13 நகரங்களில் வெயில் சதம் அடித்தது. இதற்கிடையே, வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் சேலான மழையும் பெய்துள்ளது. இருப்பினும் நீலகிரி மாவட்டத்தில் வெப்ப நிலை என்பது 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. இதேநிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். 19ம் தேதி வரை தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நீடிக்கும். சென்னையில் வெப்ப நிலை என்பது 102 டிகிரி வரை இருந்தது.

The post 13 நகரங்களில் வெயில் சதமடித்தது: ஈரோட்டில் அதிகபட்சமாக 106 டிகிரி; மாநிலம் முழுவதும் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Chennai ,Tamil Nadu ,Chennai Meteorological Department ,
× RELATED ஈரோட்டில் தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல்