×

மாம்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் 2 வது வார்டு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை இருந்து வந்தது. இதையடுத்து இந்த பகுதிக்கு தனியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க தேவையான நிதியை மாவட்டக்குழு உறுப்பினர் காயத்ரி அன்புச்செழியன் தனது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் நிதியில் இருந்து வழங்கினார்.

‘’ தற்போது 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதும் திட்டம் தயாரிக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கி குடியிருப்பு பூங்காவை ஒட்டி இடம் தேர்வு செய்யப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடைந்ததும் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து வைக்கப்படும்’’ என்று மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி கூறினார்.

The post மாம்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி appeared first on Dinakaran.

Tags : Mambakkam ,Tirupporur ,2nd Ward ,Mambakkkkum Uraduthi ,Tirupporur Union ,Mambakkam curb ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே 9 பசு மாடுகள்...