×

தெலங்கானா பாஜகவை சேர்ந்த மாஜி பெண் எம்எல்ஏ விபத்தில் பலி

கர்னூல்: தெலங்கானா மாநிலம் கர்னூல் அடுத்த ஆலூர் பாஜக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாட்டீல் நீரஜா ரெட்டி (52), ஐதராபாத்தில் இருந்து கர்னூலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. பீச்சுபள்ளியில் நடந்த இந்த சாலை விபத்தில் நீரஜா ரெட்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கோதண்டபுரம் போலீசார் கூறுகையில், ‘நீரஜா ரெட்டியின் கார் வேகமாக சென்ற போது, காரின் பின் டயர் திடீரென வெடித்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அதிவேகமாக தேசிய நெடுஞ்சாலை ஓட்டிய விவசாய நிலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கியது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டார்’ என்றனர். தெர்னகல் கிராமத்தைச் சேர்ந்த நீரஜா ரெட்டி, 2009 பொதுத் தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் ஆலூரில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2019ல் சிறிது காலம் ஒய்எஸ்ஆர் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பாஜகவில் சேர்ந்து மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தெலங்கானா பாஜகவை சேர்ந்த மாஜி பெண் எம்எல்ஏ விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : Maji ,Telangana ,Bajaka ,MLA ,Kornool ,Telangana State Kornool ,Alur Bajaga ,Patil Neerja Reddy ,Hyderabad ,
× RELATED எக்ஸ்ட்ரா லக்கேஜ் தாமரையை கழற்றிவிட...