×

28 ரயில்களில் 583 படுக்கைகள் அதிகரிப்பு –தென்னக ரயில்வே அறிவிப்பால் பயணிகள் அவதி எனப் புகார்..!!

சென்னை: 3 படுக்கை ஏசி பெட்டிகளை எகானாமி ஏசி பெட்டிகளாக மாற்றியதன் மூலம் ஒரு பெட்டியில் 72 பேருக்கு பதிலாக 83 பேர் பயணிக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சைடு பெர்த்தில் படுப்போர் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என ரயில்வே நிர்வாகத்தின் முடிவுக்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னையில் இருந்து டெல்லி ஹௌரா போன்ற தொலைதூர நகரங்களுக்கு பயணிக்க திட்டமிடும் ரயில் பயணிகளுக்காக கூடுதல் படுகைகளை பொறுத்த தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதற்காக 3 டையர் ஏசி பெட்டிகள் புதிய எகானாமி ஏசி பெட்டிகளாக மாற்றப்பட்டு 28 ரயில்களில் 583 படுக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் ஒரு பெட்டியில் 72 பேருக்கு பதிலாக 83 பேர் பயணிக்க முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக அதிக தேவையுள்ள வழித்தடங்களில் தினசரி மற்றும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த மாற்றத்திற்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளன. சென்னை – மங்களூரு, சென்னை – நியூ ஜல்பைகுரி, சென்னை- புதுடெல்லி, சென்னை- சாப்ரா, கன்னியாகுமரி- புனே, மதுரை- சென்னை, புதுச்சேரி – ஹவுரா உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் 2 -7 எகானமி ஏசி பெட்டிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ரயில்வேயின் இந்த நடவடிக்கையால் கூடுதல் பயணிகளுக்கு இடம் கிடைக்கும் என்றாலும் சைடு பர்த்தில் 3 படுக்கைகள் பொருத்தப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் படுத்து உறங்கநினைக்கும் பயணிகளுக்கு பெரும் அளவில் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளின் பர்த் மற்றும் கோச் எங்கள் மாற்றப்பட்டுள்ளதால் அந்த வகையிலும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம் கோடை காலத்தில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. அதே நேரத்தில் தங்களின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்த்து சிரமங்களை களைய வேண்டும் என ரயில்வே பயணிகள் தெரிவிக்கின்றனர்.

The post 28 ரயில்களில் 583 படுக்கைகள் அதிகரிப்பு – தென்னக ரயில்வே அறிவிப்பால் பயணிகள் அவதி எனப் புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai ,Dinakaran ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...