- Awadi
- சாய்குமார்
- திருமுல்லைவயல் சத்தியமூர்த்தி நகர் காவியம்
- குடியிருப்பு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சிறப்புக் காவலாளி
ஆவடி: திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சாய்குமார்(50). இவர், தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணியில் எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். அடிக்கடி வேலை முடிந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மேலும் மது அருந்துவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனை குடும்பத்தினர் பலமுறை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் இதை கேட்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் சாய்குமார் முழு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது மகள் சாய்சொரூபா கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சாய்க்குமார், வீட்டில் இருந்து கத்தியை எடுத்து தனது வயிற்றில் சரமாரி குத்திக்கொண்டார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி, திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். …
The post குடும்ப தகராறில் விரக்தி மதுபோதையில் தன்னைத்தானே கத்தியால் குத்திய போலீஸ் எஸ்ஐ: ஆபத்தான நிலையில் சிகிச்சை appeared first on Dinakaran.