×

கலைஞர் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல்; ரூ.1.14 கோடியில் போதை தடுப்பு மையங்கள்: பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கீதா ஜீவன்..!!

சென்னை: சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு கலைஞர் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும்; ரூ.1.14 கோடியில் போதை தடுப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அவை பின்வருமாறு;

கலைஞர் பிறந்த நாளன்றும் இனிப்பு பொங்கல் தரப்படும்:

சத்துணவு திட்டத்தில் கருணாநிதி பிறந்த நாளன்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருக்கிறார். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்த நாளை போல கலைஞர் கருணாநிதி பிறந்த நாளன்றும் இனிப்பு பொங்கல் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் சீரமைக்கப்படும்:

கூடுதல் பெண் குழந்தைகள் பயனடைய முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும். அரசு இல்லக் குழந்தைகளை திட்டத்தில் இணைத்தல் போன்ற சில மாற்றங்கள் செய்து திட்டம் மறுசீரமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

ரூ.1.14 கோடியில் போதை தடுப்பு மையங்கள்:

சென்னை, கோவை, திருச்சியில் ரூ.1.14 கோடியில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருக்கிறார். 17,312 அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு ரூ.25.70 கோடியில் சமையல் உபகரணங்கள் வழங்கப்படும். சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நவீன தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

598 மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா:

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க கூடுதல் நிதியாக ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 2 ஆண்டுகளில் 598 வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நிவாரணம் உயர்த்தி தரப்படும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அமைச்சர் ஜீதா ஜீவன் தெரிவித்தார்.

ரூ.10 கோடியில் கூர்நோக்கு இல்ல பணியாளர் குடியிருப்பு:

கூர்நோக்கு இல்லங்களின் பணியாளர்களுக்கு ரூ.10 கோடியில் குடியிருப்புகள் கட்டப்படும் என்று மூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.

The post கலைஞர் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல்; ரூ.1.14 கோடியில் போதை தடுப்பு மையங்கள்: பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கீதா ஜீவன்..!! appeared first on Dinakaran.

Tags : Pongal ,Prevention Centers for Prevention of Addiction ,Minister ,Keita Jeevan ,Chennai ,Sweet Pongal ,Council ,Dinakaran ,
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா