×

ஒரே நேரத்தில் வள்ளி கும்மியாட்டம் ஆடிய 1000 கலைஞர்கள்: அரசு விழாக்களில் வள்ளி கும்மியாட்டம் நடத்த வலியுறுத்தல்..!!

தாராபுரம்: தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மியாட்ட கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை வள்ளி திருமணம் செய்த நிகழ்வுகளை கலைஞர்கள் கும்மியாட்ட கலை நிகழ்ச்சி மூலம் நடனமாடி விளக்கினர்.

கேரளாவில் செண்டை மேல கலையை வளர்க்கும் நோக்கில் அதன் பயிற்சி ஆசிரியர்களுக்கு அம்மாநில அரசு உதவி தொகை வழங்குகிறது. அப்பயிற்சியை பெற விரும்புவோருக்கும் ஊக்கத்தொகை அளிக்கிறது. இது போன்ற திட்டங்களை தமிழ்நாடு அரசும் செயல்படுத்தி அரசு விழாக்களில் வள்ளி கும்மியாட்டம் நடத்த முன்வர வேண்டும் என்று கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஒரே நேரத்தில் வள்ளி கும்மியாட்டம் ஆடிய 1000 கலைஞர்கள்: அரசு விழாக்களில் வள்ளி கும்மியாட்டம் நடத்த வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Valli Kummiyattam ,Valli ,Tarapuram ,Valli Kummiyatta ,Tharapuram Bus Station… ,
× RELATED போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்