×

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

காங்கயம், ஏப்.17: காங்கயத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.காங்கயம், களிமேடு பகுதியில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கண்ணுசாமி தலைமை வைத்தார். இதில் திராவிடர் கழக நிர்வாகி முத்து முருகேசன், காங்கயம் சி.எஸ்.ஐ. போதகர் ஏனெஸ்ட், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், லாசர், ரத்த தான அறக்கட்டளை நிர்வாகி பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். பின்னர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : Dr ,Ambetkar ,Kangayam ,Revolutionary Youth Front ,Kanganam, ,Clamedu ,Dr. Ambetkar ,Festival ,Dinakaran ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!