×

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புரோட்டா மாஸ்டர் பலி

தேவதானப்பட்டி, ஏப். 17: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (57). இவர் கெங்குவார்பட்டி கம்பெனி பிரிவில் தனியார் ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தார். நேற்று வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது புஷ்பராணிநகர் பஸ் ஸ்டாப் அருகே செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அமுதா தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

The post அடையாளம் தெரியாத வாகனம் மோதி புரோட்டா மாஸ்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Prota ,Devdhanapatti ,Rajendran ,Kengwarpatti Pushparani ,Devadanapatti ,Kengwarpatti ,
× RELATED நெய்வேலியில் பரபரப்பு காவல் நிலையம்...