×

விளாத்திகுளத்தில் இலவச மருத்துவ முகாம்

விளாத்திகுளம்,ஏப்.17: விளாத்திகுளத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாமை மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து விளாத்திகுளம் ஸ்ரீசத்யசாயி சேவா சமிதி, ஸ்காட் நிர்மான் கிராம மேம்பாட்டு திட்டம், மரங்கள் மக்கள் இயக்கம், தானம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்து மருத்துவ பரிசோதனை செய்து முகாமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாாிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, பேரூர் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் அருள்ராஜ், சமூக ஆர்வலர் மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், வார்டு செயலாளர் ஸ்டாலின் கென்னடி, விளாத்திகுளம் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட மருத்துவ ஊழியர்கள் பலா் கலந்து கொண்டனர். இம்முகாமில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

The post விளாத்திகுளத்தில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Vlathikulam ,Markandeyan ,MLA ,Medical Camp ,
× RELATED புதூர் மத்திய ஒன்றியத்தில் கிராமம்,...