×

கயத்தாறில் ரூ.20.75 லட்சத்தில் வள மீட்பு பூங்கா உலர் களம் அடிக்கல் நாட்டு விழா

கயத்தாறு.ஏப்.17: கயத்தாறில் ரூ.20.75 லட்சம் மதிப்பில் வள மீட்பு பூங்கா உலர் களம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு வளாகத்தில் வள மீட்பு பூங்கா உலர் களம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.20.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமை வகித்தார். கயத்தாறு பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் சபுரா சலீமா முன்னிலை வகித்தார்.

கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை உலர்களம் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, மாவட்ட தொண்டர் அணி செல்வகுமார், வார்டு கவுன்சிலர் நயினார் பாண்டியன், முன்னாள் பேரூர் செயலாளர் இஸ்மாயில், வழக்கறிஞர் மாரியப்பன், ஷேக் தாவூத், கொம்பையா பாண்டியன், கார்த்திக், முருகன், அந்தோணி, சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post கயத்தாறில் ரூ.20.75 லட்சத்தில் வள மீட்பு பூங்கா உலர் களம் அடிக்கல் நாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : recovery park ,Gayathar ,Resource Recovery Park ,Kayathar ,Municipality ,Dinakaran ,
× RELATED கயத்தாறில் துணை ராணுவத்தினர் போலீசார் கொடி அணிவகுப்பு