×

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு விழா

கோவில்பட்டி,ஏப்.17: கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் 39வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாசலம் தலைமை வகித்தார். சென்னை எவர்சண்டாய் கன்ஸ்ட்ரக்சன் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் டிடெய்லிங் மேனேஜரும் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவருமான சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று சிறப்புரையாற்றினார். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சிவராஜ் விளையாட்டு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பல்வேறு தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் மாணவர்களுக்கான தனி நபர் விளையாட்டுப்போட்டிக்கான சாம்பியன்சிப் பட்டத்தை இரண்டாமாண்டு மின்னணுவியல்துறை மாணவர் அய்யனார் தட்டி சென்றார். மாணவிகளுக்கான தனி நபர் விளையாட்டுப் போட்டிக்கான சாம்பியன்சிப் பட்டத்தை முதலாமாண்டு மின்னியல்துறை மாணவி சுபாஷினி தட்டி சென்றார். நீல நிற அணி குழு விளையாட்டு போட்டிக்கான கேடயத்தைப்பெற்றது. மஞ்சள் நிற அணி தனி நபர் விளையாட்டுப் போட்டிக்கான கேடயத்தைப் பெற்றது. ஒட்டு மொத்த சாம்பியன்சிப் பட்டத்தை நீலநிற அணி தட்டிச் சென்றது.

விழாவில் நேஷனல் பொறியியற் கல்லூரி இயக்குநர் சண்முகவேல் மற்றும் முதல்வர் காளிதாஸ முருகவேல், கே.ஆர்.கலைக்கல்லூரி முதல்வர் மதிவண்ணன், ஏனைய விருந்தினர்கள், பயிலக ஆசிரிய, அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர். அருணாசலம் அவர்கள் ஆலோசனையின்படி கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராஜேஸ்வரன், உடற்கல்வி இயக்குநர், கல்லூரி துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

The post கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Kovilpatti Lakshmi Ammal Polytechnic College Sports Festival ,Kovilpatti ,39th Annual Sports Festival ,Lakshmi Ammal ,Polytechnic College ,KR Educational Institutions ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் சுமை...