×

பைக் மீது கார் மோதி கவுன்சிலர் பரிதாப பலி

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் பகுதி ஒன்றிய கவுன்சிலர் முருகன்(49), சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர், நேற்று காலை தனது நிலத்தில் கூலி வேலை செய்யஆட்களை அழைத்துவர சொர்ப்பனந்தல் கிராமத்திற்கு சென்றுவிட்டு, பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பைக்கும் தீப்பிடித்து எரிந்தது.

The post பைக் மீது கார் மோதி கவுன்சிலர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Councillor ,Pathapa ,Dandarambatu ,Thiruvannamalai District ,Satanur Region Union ,Murugan ,
× RELATED பணப் பட்டுவாடா விவகாரம்; தேமுதிக...