×

தாங்கி ஊராட்சியில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வாலாஜாபாத்,ஏப். 17: தாங்கி ஊராட்சியில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைதுள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம் தாங்கி ஊராட்சி மற்றும் அதனை சுற்றி வில்லிவலம், நாயக்கன்பேட்டை, ஏகனாம்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இங்குள்ள மக்களின் பிரதான தொழில் கால்நடை வளர்த்தல் மற்றும் விவசாயம். இந்நிலையில், இந்த ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இந்த கால்நடைகளுக்கு அவ்வப்பொழுது ஏற்படும் உடல் உபாதைகளுக்கு எட்டு கிலோமீட்டர் தூரம் உள்ள அய்யம்பேட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இல்லையெனில், தனியார் கால்நடை மருத்துவர் அழைத்து பரிசோதிக்க வேண்டும்.

இதுபோன்ற சூழல்தான் இந்த ஊராட்சிகளில் தற்போது வரை நிலவி வருகின்றது. எனவே, வில்லிவலம், நாயக்கன்பேட்டை, ஏகனாம்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மைய பகுதியான தாங்கி ஊராட்சியில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து இப்பகுதி கிராமமக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியம் தாங்கி, வில்லிவலம், நாயக்கன் பேட்டை, எக்கனாம்பேட்டை ஆகிய கிராமங்களில் கால்நடை வளர்ப்போர் அதிகம். மேலும், கால்நடைகளுக்கு பேரிடர் காலங்களில் ஏற்படும் சுவாசக் கோளாறு, கருவூட்டல், சளி காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளுக்கு அய்யம்பேட்டையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இதுபோன்ற சூழ்நிலையில் சில நேரங்களில் கால்நடைகள் நடக்க முடியாமல் அவதிப்படும் சூழலும் நிலவுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் கிராமத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வரும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் எங்கள் பகுதியில் கிளை கால்நடை மருந்தகம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் வாரத்திற்கு 2 நாட்கள் இயங்கும் வகையில் கால்நடை மருந்தகம் செயல்பட்டால் இப்பகுதி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மாவட்ட கால்நடை அலுவலர் இதனை ஆய்வு செய்து உடனடியாக இப்பகுதியில் கால்நடை மருந்தகம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தாங்கி ஊராட்சியில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thangi Panchayat ,Walajabad ,Walajabad Union ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நகைக்காக மூதாட்டி கொலை!!