×

கப்ஜா’ நடிகருக்கு 3வது முறையாக கொரோனா பாதிப்பு

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் போசானி கிருஷ்ணா முரளி (65), புனேயில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு ஐதராபாத் திரும்பினார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்து சென்று பரிசோதனை செய்து பார்த்ததில், போசானி கிருஷ்ணா முரளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுஇருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஏற்கனவே போசானி கிருஷ்ணா முரளிக்கு 2 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை தேறினார்.

தற்போது 3வது முறையாக அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது அவரது ரசிகர் களையும், தெலுங்கு படவுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான ‘கப்ஜா’ படத்தில் நடித்திருந்த போசானி கிருஷ்ணா முரளி, தெலுங்கில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்தான் ஆந்திர மாநில திரைப்பட மேம்பாட்டுக்கழக தலைவராக, ஆந்திர அரசு அவரை நியமித்திருந்தது.

The post கப்ஜா’ நடிகருக்கு 3வது முறையாக கொரோனா பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Bosani Krishna Murali ,PUNE ,Kapza ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.