×

புதிய தொழில்நுட்பங்களுடன் தமிழகத்தில் உற்பத்தி முறையை கையாள வேண்டும்: தொழில்துறை செயலாளர் பேச்சு

சென்னை: புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய உற்பத்தி முறையை கையாள வேண்டும் என்று தொழில்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார். டிட்கோ மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாட்டின் கூட்டு முயற்சியான ஒளிர் புத்தாக்கத் தொழில் நிறுவனங்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை ஏப்.13ம் தேதி நடைபெற்றது. இந்த பயிற்சிப் பட்டறையை தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மேம்பட்ட உற்பத்தி, ரோபாட்டிக்ஸ், இ-வணிகம், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, அக்ரிடெக், பயோடெக். மெட்டெக், ஹெல்த்டெக், எட்டெக் ஃபின்டெக் மற்றும் ஸ்பேஸ்டெக் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 250 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிகழ்ச்சியில் பேசிய தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறியதாவது: அரசின் பல்வேறு துறைகள் ஒன்றாகவும் மற்றும் தனியார் துறையுடன் இணைந்தும் புத்தாக்க நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவதற்கு இந்த ‘ஒளிர்’ நிகழ்வு சான்றாகத் திகழ்கிறது. பல மேலைநாட்டு நிறுவனங்கள் தமக்கு தேவையான பொருட்களை நம்நாட்டில் உற்பத்தி செய்கின்றன. தற்போது, இப்பொருட்களை, மீண்டும் அவர்கள் நாட்டிலேயே தயாரிக்க முயல்கின்றன.

இதை தவிர்க்க. நாம் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய உற்பத்தி முறையை கையாள வேண்டியுள்ளது. இத்தகையச் சூழலில், உற்பத்தி துறையிலுள்ள புத்தாக்க நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு இந்த திறன்மிகு மையங்கள் இன்றியமையாததாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய டிட்கோ மேலாண்மை இயக்குநர் ஜெய முரளிதரன் கூறியதாவது:தமிழ்நாடு தொழில்துறையின் தலைமை நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த புத்தாக்க நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு மாற்றாக, தொழில்முனைப்போடு புதிய புத்தாக்க மையங்களை அமைக்க வேண்டும் என்றார். இதில் 25 புத்தாக்க மையங்கள் டிட்கோவின் திறன்மிகு மையங்களுடன் அவற்றின் வசதிகளை பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

The post புதிய தொழில்நுட்பங்களுடன் தமிழகத்தில் உற்பத்தி முறையை கையாள வேண்டும்: தொழில்துறை செயலாளர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Industries Secretary ,CHENNAI ,Industry Secretary ,S. Krishnan ,TIDCO ,Dinakaran ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...