×

ரபேல் வாட்ச், நண்பர்கள் மூலம் ஆதாயம் அண்ணாமலை மீது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை: தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

சென்னை: எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தனது கையில் கட்டியிருக்கும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரஃபேல் வாட்சை, கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணனிடம் வாங்கியதாக ஒரு ரசீதை காட்டினார். ரூ.3 லட்சத்தை ரொக்கமாக கொடுத்து, ரஃபேல் வாட்சை வாங்கியது வருமானவரி சட்டப்படி குற்றம். இதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை மாதம் ரூ.8 லட்சம் வரை செலவு செய்வதாகவும், தனக்கு சில நண்பர்களே மாத வீட்டு வாடகை ரூ 3.75 லட்சம் உள்பட தனது உதவியாளர்கள், டிரைவர்களுக்கு சம்பளம், கார் செலவு அனைத்திற்கும் உதவி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

எனவே அண்ணாமலையின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழக அரசு சிறப்பு புலனாய்வு விசாரணை மேற்கொள்ள வேண்டும். பல ஆயிரம் கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்ட் நிதி மோசடி விவகாரத்தில் அண்ணாமலையின் தொடர்பும் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்த வேண்டும். ஆருத்ரா கோல்ட் நிதி மோசடி தொடர்பு, லட்சக்கணக்கில் நண்பர்களிடமிருந்து அண்ணாமலை பெரும் ஆதாயம், ரஃபேல் வாட்ச் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொண்டு சட்டப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

The post ரபேல் வாட்ச், நண்பர்கள் மூலம் ஆதாயம் அண்ணாமலை மீது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை: தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Adhayam ,STBI ,Tamil Nadu Govt. ,CHENNAI ,State ,President ,Nellie Mubarak ,BJP ,Annamalai ,Adhayam Annamalai ,STB ,Tamil ,Nadu Govt. ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்