×

அமித்ஷாவை சந்திக்கவில்லை பாஜவில் ஒரு போதும் சேர மாட்டேன்: வதந்திகளுக்கு அஜித் பவார் முற்றுப்புள்ளி

மும்பை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் மும்பை வந்தார். அப்போது அமித்ஷாவை தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் ரகசியமாக சந்தித்து பாரதிய ஜனதாவில் சேருவது பற்றி ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபுரப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த செய்திகள் உண்மைக்கு மாறானவை என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அஜித்பவார். தான் பாரதிய ஜனதாவில் ஒரு போதும் சேரப்போவதில்லை என்றும் அமித் ஷாவை ரகசியமாக சந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார். அமித்ஷாவின் நடமாட்டத்தை ஊடகங்கள் உன்னிப்பாக கண்காணித்து வந்தன. எனவே ரகசியமாக அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பே இல்லை என்றும் அஜித் பவார் தெரிவித்தார்.

The post அமித்ஷாவை சந்திக்கவில்லை பாஜவில் ஒரு போதும் சேர மாட்டேன்: வதந்திகளுக்கு அஜித் பவார் முற்றுப்புள்ளி appeared first on Dinakaran.

Tags : amitshah ,baja ,ajit bawar ,Mumbai ,Union Home Minister ,Amitsha ,Ajit Bhawar ,
× RELATED அஜித் பவாரின் 18 எம்எல்ஏ-க்கள் மீண்டும்...