×

வாலாஜா அருகே 144 தடை உத்தரவு: போலீஸ் குவிப்பு

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த பாகவெளி கிராமத்தில் ஆண்டுதோறும் சித்திரை‌ மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று கிணற்றையே கருவறையாக கொண்ட பாப்பாத்தி கன்னியம்மன் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவிற்காக ஆந்திர மாநிலம் சித்தூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 5 தலைமுறைகளாக ஒரு சமூகத்தினர் பாப்பாத்தி கன்னியம்மன் திருவிழாவை நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு திருவிழாவை யார் நடத்துவது என்பதில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையால்தடை விதிக்கப்பட்டது.

இந்தாண்டு நிலத்தின் உரிமையாளர் நாராயணனுக்கும்(65) பங்காளிகளுக்கும் இடையே யார் திருவிழா நடத்துவது என்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண முடியாததால் ராணிப்பேட்டை ஆர்டிஓ வினோத்குமார் திருவிழா நடத்த இந்த ஆண்டு மீண்டும் தடை விதித்தார். திருவிழாவுக்கான சித்திரை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கிராமத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். வெளியூர்களில் வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

The post வாலாஜா அருகே 144 தடை உத்தரவு: போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Walaja ,Ranipet ,Bhagaveli ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...