×

கொளுத்துது வெயிலு… வெடிக்குது பீர் பாட்டிலு…

காரமடை: கோவை, காரமடை அருகே திம்மம்பாளையம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக இருப்பவர் செந்தில்குமார் (45). காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தின் கீழ் விற்பனையின்போது 10 ரூபாய் அதிகம் பெற்று பின்னர் காலி பாட்டிலை ஒப்படைத்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி செந்தில்குமார் பாட்டில்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி கொடுத்து விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஒரு பீர் பாட்டில் திடீரென வெடித்து சிதறியது.

இதில் செந்தில்குமாரின் கண், முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் காயம் ஏற்பட்டது. கண்ணாடி துகள்கள் இடது கண்ணின் கருவிழியை கிழித்துள்ளது. தகவல் அறிந்ததும் சூபர்வைசர் சந்திரசேகர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். கடும் கோடையை சமாளிக்க மதுபிரியர்கள் பீர் வாங்கி அருந்தி வருகிறார்கள். இந்நிலையில் குளிர்ச்சி தருவதாக கருதப்படும் பீரே வெயிலுக்கு வெடித்து சிதறிய சம்பவம் குடிபிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கொளுத்துது வெயிலு… வெடிக்குது பீர் பாட்டிலு… appeared first on Dinakaran.

Tags : Karamadai ,Senthilkumar ,Thimmampalayam Tasmac ,Karamadai, Coimbatore ,Dinakaran ,
× RELATED காரமடையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்