×

ஐபிஎல்.லில் இன்று 2 போட்டி மும்பை-கொல்கத்தா பிற்பகலில் மோதல்: இரவில் குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

மும்பை: 16-வது ஐ.பி.எல். o20 தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 22-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. கடந்த போட்டியில் டெல்லியை வீழ்த்தியது. முதல் 2 ஆட்டங்களில் ஏமாற்றம் அளித்த கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்தது அந்த அணிக்கு நல்ல விஷயமாகும். திலக் வர்மா நன்றாக ஆடுகிறார். டிம் டேவிட், கேமரூன் கிரீனும் ஜொலிக்கவேண்டும். அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் (15, 1, 0) தொடர்ந்து சோபிக்காதது மும்பைக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. அவரது அதிரடியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

இதுபோல் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. அந்த அணியின் வெற்றிகளில் முறையே ஷர்துல் தாக்குர், ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடி முக்கிய பங்கு வகித்தது. ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பேட்டிங்கில் நிதிஷ் ராணா, ரிங்குசிங், ஜெகதீசன் ஆகியோர் கலக்கினாலும் பந்துவீச்சில் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்சல் தவிர மற்றவர்கள் ரன்களை வாரி வழங்கியது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. அந்த அணி பந்து வீச்சு பலவீனத்தை சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும். வலுவான இரு அணிகளும் வரிந்துகட்டும் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் மும்பை அணியில் மெரிடித்துக்கு பதிலாக ஜோப்ரா ஆர்ச்சர் ஆடுவார் என தெரிகிறது.

இதுபோல் அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 23-வது லீக் போட்டியில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. குஜராத் 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றி ஒரு தோல்வி கண்டு 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் வலுவாக விளங்கி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியடைந்துள்ளது. பேட்டிங், பந்துவீச்சில் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். 4-வது வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூரில் ஆடுவது குஜராத் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என கூறப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிராக 2வது டி.20 போட்டி பாபர் அசாம் சதம் விளாசல் பாகிஸ்தான் சூப்பர் வெற்றி

லாகூர்:பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி நேற்று லாகூரில் நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் நாட் அவுட்டாக 101 (58பந்து) ரன் விளாசினார். கேப்டனாக அவர் டி.20யில் 3வது சதம் விளாசி உள்ளார். முகமது ரிஸ்வான் 50, இப்திகார் அகமது நாட்அவுட்டாக 33 அடிக்க 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் குவித்தது.

பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேன் நாட் அவுட்டாக 65, சாட் போவ்ஸ் 26, கேப்டன் லதாம் 19 ரன்எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேறினர். 20 ஓவரில் நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களே எடுத்தது. இதனால் 38 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் ஹரிஸ் ரவூப் 4 விக்கெட் வீழ்த்தினார். பாபர் அசாம் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 2-0 எஎன பாகிஸ்தான் முன்னிலை வகிக்க 3வது போட்டி நாளை நடக்கிறது.

The post ஐபிஎல்.லில் இன்று 2 போட்டி மும்பை-கொல்கத்தா பிற்பகலில் மோதல்: இரவில் குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : IPL ,Lille ,Mumbai ,Kolkata ,Gujarat ,Rajasthan ,Palaperite ,16th ,I. GP ,Mumbai Indians ,SL o20 ,Lil ,PM ,Palaperish ,Dinakaran ,
× RELATED இந்திய கிரிக்கெட் அணி அடுத்த...