×

சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜரானார். சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்காக மதுபானக் கொள்கையை மாற்றுவதற்காக ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் ஏற்கனவே மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மணீஷ் சிசோடியா சிறையில் உள்ள நிலையில் சிபிஐ விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானார்.

The post சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,CBI ,CPI ,Delhi government ,SAMMAN ,
× RELATED டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா...