×

தொழிலாளியை மிரட்டியவர் கைது

பேட்டை, ஏப். 16: சுத்தமல்லி இந்திரா காலனியை சேர்ந்த அழகு முத்து மகன் முத்து கிருஷ்ணன் (21). இவர் அங்குள்ள மாரியம்மன் கோயில் வழியாக நேற்று நடந்துசென்ற போது, சுத்தமல்லி கோவில்பத்து தெருவைச் சேர்ந்த முத்துக்குட்டியின் மகன் முருகன் (25), 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் மறித்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த சுத்தமல்லி எஸ்ஐ முத்துராஜ், 17 வயதான சிறுவனை கைது செய்தார். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு பாளையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மாயமான மூவரைத் தேடி வருகின்றனர்.

The post தொழிலாளியை மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Petty ,Muthu Krishnan ,Akku Muthu ,Sudtamalli Indira Colony ,Dinakaran ,
× RELATED புதிய வீடு கட்டியதில் தகராறு கழுத்தறுத்து மனைவி கொலை: ராணுவ வீரர் கைது