×

நெல்லையில் கடும் கோடை வெயில் எதிரொலி: ஈரடுக்கு மேம்பாலம் கீழ் தளத்தில் ஒரே நேரத்தில் வாகனங்கள் அணிவகுப்பு

நெல்லை, ஏப். 16: நெல்லையில் கடும் கோடை வெயில் எதிரொலியாக, வெயிலை சமாளிக்க முடியாமல் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் தளத்தின் வழியாக வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். இதனால் கீழ் தளத்தில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
நெல்லை சந்திப்பையும், டவுன் பகுதியையும் இணைக்கும் வகையில் ரயில்வே பாதையின் குறுக்கே அமைக்கப்பட்ட ஆசியாவில் புகழ் பெற்ற ஈரடுக்கு மேம்பாலம் நெல்லை சந்திப்பு மேம்பாலமாகும். நெல்லை சந்திப்பில் இருந்து டவுனுக்கு செல்பவர்கள் மேம்பாலத்தின் மேலே பயணித்து புரம் வழியாக டவுன் செல்லலாம். இதில் லாரிகள், பஸ்கள், கனரக வாகனங்கள் பயணிக்கின்றன.

அதே நேரத்தில் கீழ் தளத்தின் வழியாக பைக், ஆட்டோ போன்ற சிறு வாகனங்கள் பயணித்து டவுன் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலைகளும், வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளது. இந்த ஈரடுக்கு பாலங்களுக்கும் கீழே ரயில்வே போக்குவரத்து தங்கு தடையின்றி நடந்து வருகிறது. ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் ரயில்வே தண்டவாளத்திற்கு இரு புறங்களிலும் ஹார்டுவேர், இரும்பு கடைகள், எலக்ட்ரிக்கல், மோட்டார் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால் இந்தப் பகுதி எப்போதுமே நெரிசலாக இருக்கும். இந்நிலையில் நெல்லையில் கடந்த இரு மாதங்களாக கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் வெப்பக் காற்று வீசுகிறது. கடும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பைக் மற்றும் சிறிய வாகனங்களில் செல்பவர்கள், மேம்பாலத்தின் மேல் தளத்தில் பயணிப்பதைத் தவிர்த்து சற்று நிழலாக உள்ள கீழ்தளத்தில் பயணிக்கின்றனர்.

அதே நேரத்தில் மேம்பாலத்தின் கீழ் தளம் தொடங்கும் இடத்திலும், முடியும் இடத்திலும் இரு சக்கர வாகனங்களும் அந்த பகுதி முழுவதும் பார்க்கிங் செய்யப்படுகிறது. நேற்று கடும் வெயிலுக்கு தாக்க முடியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்த பலரும் ஈரடுக்கு ேமம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக ஒரே நேரத்தில் பயணித்தனர். இந்தக் காரணங்களால் நேற்று பகல் 12 மணிக்கு மேல் கீழ் தளத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் இரு திசைகளில் இருந்தும் அதிக வாகனங்கள் வந்ததால் வாகனங்கள் நின்று, நின்று ஊர்ந்து சென்றன. வழக்கமாக ஈரடுக்கு ேமம்பாலத்தின் கீழ் பகுதி காலியாக இருக்கும். இதனால் பலருக்கு காற்று வாங்குவதற்காக ேமம்பாலத்தின் கீழ் பகுதியில் அமர்ந்து இருப்பது வழக்கம். ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடும் போக்குவரத்து ெநரிசல் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர்.

The post நெல்லையில் கடும் கோடை வெயில் எதிரொலி: ஈரடுக்கு மேம்பாலம் கீழ் தளத்தில் ஒரே நேரத்தில் வாகனங்கள் அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Erudku ,Nellie ,Nella ,Eradukku ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!