×

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோபால்பட்டி சந்தையில் ரூ.10 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

கோபால்பட்டி, ஏப். 16: சாணார்பட்டி அருகே நடைபெற்ற வாரசந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானது. சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் வாரசந்தை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி திண்டுக்கல் சித்தையங்கோட்டை, நத்தம், கோசுகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இன்று நடைபெற்ற கோபால்பட்டி ஆட்டு சந்தைக்கு அதிகளவில் வந்திருந்தனர். ஆடுகள் வரத்து குறைவாக இருந்த போதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தது.

இதில் ஒவ்வொரு ஆடுகளும் சுமார் 5 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கோபால்பட்டி நடைபெற்ற ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகை, கோவில் திருவிழா மற்றும் திருமண நிகழ்ச்சிக்காக 10 லட்சத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனையானது. இது குறித்து வியாபாரி சித்திக் கூறுகையில், தற்பொழுது கிராமப்புறங்களில் கோயில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறுகிறது. இதனால் கோயில் திருவிழாவிற்கு மற்றும் ரம்ஜானுக்காக கிடாய் விலை ஏற்றம் கண்டு இருப்பதாகவும், சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் ஆடுகளின் விலை உயர்ந்திருக்கிறது என்றார்.

The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோபால்பட்டி சந்தையில் ரூ.10 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ramzan festival ,Gopalpatti ,Chanarpatti ,Ramzan ,
× RELATED சாணார்பட்டி அருகே ஆலய திருவிழாவில்...