×

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ.21.35 லட்சம் காணிக்கை

ஈரோடு,ஏப்.16: ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.21.35லட்சம் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
ஈரோடு மாநகரில் பெரியமாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறாவை சேர்ந்த சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கப்பட்டு, கடந்த 9ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைந்தது. பெரியமாரியம்மன் கோயிலில் 6 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. திருவிழாவுக்காக 5 உண்டியல்கள் கூடுதலாக வைக்கப்பட்டன. திருவிழா முடிந்த நிலையில் நேற்று ஈரோடு பெரியமாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக உண்டியல்கள் திருச்செங்கோடு அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணிகாந்தன், ஈரோடு தக்கார் அன்னக்கொடி, கோயில் செயல் அலுவலர் அருள்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது.

இதில், உண்டியல்களில் பக்தர்கள் ரூ.21 லட்சத்து 35ஆயிரத்து 286ம், 108 கிராம் தங்கம், 609 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் கல்லூரி மாணவ-மாணவிகளும், பக்தர்களும் ஈடுபட்டனர். இதேபோல், வரக்கூடிய வாரத்தில் பெரியமாரியம்மன் கோயில் வகையறாவை சேர்ந்த சின்னமாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட உள்ளது என கோயில் செயல்அலுவலர் அருள்குமார் தெரிவித்தார்.

The post ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ.21.35 லட்சம் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Erode Periyamariamman temple ,Erode ,Periyamariamman ,Periyamariamman temple ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...