×

தேசிய மூத்தோர் தடகள போட்டி ஓய்வு பெற்ற எஸ்ஐ 1 தங்கம், 1 வெண்கலம் வென்று சாதனை: மன்னார்குடி டிஎஸ்பி பாராட்டு

மன்னார்குடி, ஏப். 16: பெங்களூருவில் அண்மையில் நடந்த தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் பங்கேற்று 1 தங்கம் மற்றும்1 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்த ஓய்வுபெற்ற எஸ்ஐ நடராஜனை மன்னார்குடி டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் பாராட்டினார். அகில இந்திய அளவிலான 42 வது மூத்தோர் தடகள சாம்பியன் பட்ட போ ட்டிகள் கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் உள்ள காண்டி ராவா விளையா ட்டு அரங்கில் அண்மையில் 5 நாட்கள் நடந்தது. இதில் ஓட்டப்போட்டி, குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், நடைபோட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் நடந்த போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் டெல்லி, மும்பை உள்ளிட்ட 20க்கும் மேற் பட்ட மாநிலங்களில் இருந்து 35 வயது முதல் 95 வயதிற்குட்பட்ட சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த காவல்துறையில்பணி யாற்றி ஓய்வு பெற்ற எஸ்ஐ நடராஜன் (69) என்பவர் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொண்டு 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்27 நிமிடம் 12 வினாடி களில் ஓடி இந்திய அளவில் புதிய சாதனை படைத்தது முதலிடம் பெற்று தங்கப்பதக்கம், வென்றார்.மேலும், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங் கனைகளுக்கு கர்நாடக மாநில மூத்தோர் தடகள சங்க தலைவர் டாக்டர் ரெங்கநாதன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் வரும் ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற உள்ள உலக அளவிலான மூத்தோர் தடகள சாம்பியன் பட்டப் போட்டிகளில் ஓய்வு பெற்ற எஸ்ஐ நடராஜன் இந்திய அணி சார்பில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இதுகுறித்து தகவல் அறிந்து, மன்னார்குடி டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோ க்கியராஜ் தேசிய அளவிலான போட்டிகளில் 1 தங்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களை வென்ற ஓய்வு பெற்ற எஸ்ஐ நடராஜனை தனது முகாம் அலு வலகத்துக்கு வரவழைத்து அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்தினார்.

The post தேசிய மூத்தோர் தடகள போட்டி ஓய்வு பெற்ற எஸ்ஐ 1 தங்கம், 1 வெண்கலம் வென்று சாதனை: மன்னார்குடி டிஎஸ்பி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : National Senior Athletics ,Mannargudi ,National Senior Athletics Games ,Bengaluru ,SI ,DSP ,Dinakaran ,
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...