×
Saravana Stores

வாடிப்பட்டி அருகே பகவதி, முத்தாலம்மன் கோயில் திருவிழா

வாடிப்பட்டி, ஏப். 16: .\வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன், முத்தாலம்மன் மற்றும் காளியம்மன் கோயில் பங்குனி உற்சவ விழா கடந்த 3 தினங்களாக அதிவிமர்சையாக நடைபெற்றது. முதல் நாளில் வாடிப்பட்டி சந்தையிலிருந்து சாமி அழைத்து வரும் நிகழ்ச்சியும், இரண்டாவது நாளாக பகவதி அம்மன் பூஞ்சோலை அடைதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் கடைசிநாள் நிகழ்ச்சியாக போடிநாக்கன்பட்டி கோயிலில் இருந்து முத்தாலம்மன், காளியம்மன் சிலைகள் மேளதாளத்துடன் முன்செல்ல நூற்றுக்கணக்கான பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தவாறு ஊர்வலமாக சென்றனர். வாடிப்பட்டி நீரேத்தான் கிராம ஆய்வாளர் அலுவலகம் அருகிலுள்ள பூஞ்சோலை சென்று அங்கு முளைப்பாரிகளை பெண்கள் கரைத்தனர்.
முன்னதாக அம்மன்களுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. இத்திருவிழாவில் ஏராளமாக பக்தர்கள் பங்கேற்று தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

The post வாடிப்பட்டி அருகே பகவதி, முத்தாலம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Bhagavathy, Muthalamman temple festival ,Vadipatti ,Bhagvati Amman ,Muthalamman ,Kaliamman ,Panguni ,Bodhinayakanpatti ,Vadipatti… ,
× RELATED மதுரை வாடிப்பட்டி அரசு பள்ளியில் மயங்கி விழுந்த +2 மாணவி உயிரிழப்பு!!