×

சோழவந்தான் அருகே புனித ஜெர்மேனம்மாள் ஆலய கொடியேற்றம்

சோழவந்தான், ஏப். 16: சோழவந்தான் அருகே ராயபுரத்தில் புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயமான புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று முன் தினம் இரவு 111ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக ஆலயத்தில் இருந்து திருவிழா கொடியுடன் கிராம மக்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் முன்னிலையில் திருவிழா கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில் ரிஷபம் ஊராட்சி மன்றத்தலைவர் சிறுமணி மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒரு வார காலம், தினமும் ஜெபமாலை மற்றும் திருப்பலி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக ஏப்.22ம் தேதி இரவு தேர் பவனி நடைபெறுகிறது. அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இதைத்தொடர்ந்து ஏப்.24ம் தேதி கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

The post சோழவந்தான் அருகே புனித ஜெர்மேனம்மாள் ஆலய கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : St. Germanammal Temple ,Cholavanthan ,Cholavandan ,Saint Germanammal Temple ,Rayapuram ,Cholavantan ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை