×

சொத்து தகராறு தம்பதியை தாக்கிய 3 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி, ஏப்.16: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலம் தெற்கு தெரு வெங்கிடுசாமி மகன் சண்முகவேல் (62). இவருக்கும் வஸ்தா வல்லம் ரெட்டிபாளையம் ராமசாமி மகன் முருகேசன் (53) குடும்பத்தாருக்கும் சொத்து பிரச்னை காரணமாக முன் விரோதம் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி காலை முருகேசன்(53), அவரது மனைவி சுஜாதா (42), வெங்கிடுசாமி மகன் தங்கவேல் (60), அவரது மனைவி மஞ்சுளா(56) ஆகியோர் சண்முகவேல் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டி சண்முகவேல் மற்றும் அவரது மனைவி மதனவள்ளியை கம்பால் தாக்கினராம்.

இதுகுறித்து சண்முகவேல் திருக்காட்டுப்பள்ளி போலீசில் நேற்று புகார் அளித்தார். இதேபோல் சண்முகவேல், மதனவள்ளி இருவரும் தங்களை தாக்கியதாக முருகேசனும் புகாரை அளித்தார். இரு புகார்களையும் ஏற்று திருக்காட்டுப்பள்ளி எஸ்ஐ கோவிந்தராஜன் வழக்கு பதிந்து முருகேசன், தங்கவேல், சண்முகவேல் ஆகிய மூவரையும் கைது செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவித்தார். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

The post சொத்து தகராறு தம்பதியை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirukkatupalli ,Sanmugavel ,Venkiduswamy ,Vinnamangalam South Street ,Thirukkatupalli, Thanjavur district ,Dinakaran ,
× RELATED உசிலம்பட்டி வேளாண் கல்லூரியில் ரத்ததான முகாம்