×

புதுவையில் புதிதாக 19 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, ஏப். 16: புதுச்சேரியில் நேற்று புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 501 ஆக உள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் 256 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை-12, காரைக்கால்-5, ஏனாம்-2 என மொத்தம் 19 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாகேவில் புதிதாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனால் தொற்று பாதிப்பு சதவீதம் 7.42 ஆக உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 501 ஆக உள்ளது. இதில் ஜிப்மரில் 2 பேர், கோரிமேடு அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 5 பேர், கோவிட் கேர் சென்டரில் 11 என மொத்தம் 18 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் 483 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் நேற்று 33 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

The post புதுவையில் புதிதாக 19 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Dinakaran ,
× RELATED புதுவை பகுதியில் கஞ்சா விற்ற...