×

பஸ்சில் இருந்து குதித்தவர் படுகாயம்

தொண்டி,ஏப்.16: தொண்டி அருகே ஒடும் பஸ்சிலிருந்து கீழே குதித்தவர் படுகாயம் அடைந்தார். பட்டுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பேருந்தில் நாகபட்டினம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த முருகபாண்டியன்(44) கண்டக்டராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் தொண்டி அருகே உள்ள வீர சங்கிலி மடம் பகுதியில் பஸ்சில் சென்று கொண்டிருந்த போது, மயிலாடுதுரை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த முருகன்(40) என்பவர் பஸ்சிலிருந்து குதித்துள்ளார். இதனால் அவர் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார். கண்டக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பஸ்சில் இருந்து குதித்தவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thondi ,Otum ,Pattukottai ,Ramanathapuram ,Badukayam ,
× RELATED தொண்டி அருகே அதிக ஒளித்திறன் மூலம்...