×

திடீர் நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: புரசைவாக்கம் பிரிக்லின் சாலையில் உள்ள திடீர் நகர் பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இன்றி சுகாதாரமற்ற நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இறந்தவர்களின் சடலங்களை வைப்பதற்கு கூட இடம் இல்லாமலும், இறப்பு சடங்குகளை செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தேமுதிகவை சேர்ந்த கு.நல்லதம்பி, திடீர் நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தர வேண்டுமென சட்டப்பேரவையில் வலியுறுத்தி இருந்தார்.

அதன் பிறகு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மூலம் பலமுறை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டும், அப்பகுதி மக்களிடம் நேரில் ஆய்வு செய்தும், பயோ மெட்ரிக் சர்வே எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே திடீர் நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post திடீர் நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Tamil Nadu government ,CHENNAI ,DMUDIK ,President ,Purasaivakam ,Sudden Nagar ,Bricklin Road ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...