×

மாநகராட்சி அலுவலகம் அருகே ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள 10வது வார்டு, மேற்கு மாட வீதியில் மாநகராட்சி பகுதி பொறியாளர் அலுவலக வளாகம் உள்ளது. இங்கு சுகாதார மையம், இ-சேவை மையம், அம்மா உணவகம் மற்றும் வார்டு கவுன்சிலர் அலுவலகம் ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு செல்லும் நுழைவாயிலில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக தனியார் ஒருவரின் ஆக்கிரமிப்பு கட்டிடம் இருந்தது. இதனால், இந்த நுழைவாயில் மிகவும் குறுகி, பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

மேலும் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்ற வாகனங்கள் வர முடியாத நிலையும் இருந்தது. இந்தநிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மண்டலக்குழு தலைவர் தனியரசு, இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று உதவிப் பொறியாளர் குணசேகர் தலைமையில் ஊழியர்கள் இந்த பகுதிக்கு வந்து, நுழைவாயிலில் இடையூறாக இருந்த தனியார் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

The post மாநகராட்சி அலுவலகம் அருகே ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,West Mata Road, 10th Ward ,Tiruvottiyur Mandal.… ,Dinakaran ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...