×

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி, காரனேசன் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜா (42). சிவகாசி அருகே விளாம்பட்டியில் பட்டாசு ஆலை வைத்துள்ளார். இங்கு 40க்கும் மேற்பட்ட அறைகளில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை ஒரு அறையில் தரை சக்கரத்திற்கு மருந்து செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டு அறை முழுவதும் இடிந்து விழுந்தது. இதில் மம்சாபுரம் இடையன்குளத்தை சேர்ந்த கருப்பசாமி (33), தங்கவேல் (55) ஆகியோர் பலியாகினர். மற்றொரு அறையும் சேதமடைந்ததில் கருப்பம்மாள் (45), மாரித்தாய் (45) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சிவகாசி தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். படுகாயமடைந்த கருப்பம்மாள், மாரித்தாய் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் பிரவீன்ராஜா, மேனேஜர் சதீஸ்(30) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
வெடி விபத்து நடந்தபோது சுமார் 5 கிமீ தூரத்திற்கு பயங்கர சத்தமும் அதிர்வும் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Praveenraja ,Karanesan Colony, Sivakasi, Virudhunagar district ,Vlampatti ,Dinakaran ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி