×

தென்னந்தோப்பை விற்பதாக ரூ1.90 கோடி மோசடி செய்த மாஜி துணைவேந்தர் கைது

தேனி: தென்னந்தோப்பை விற்பதாக ரூ.1.90 கோடி மோசடி செய்த முன்னாள் துணைவேந்தர் கைது செய்யப்பட்டார். சென்னைசேலையூர் பகுதியில் பாரத் இன்ஸ்டியூட் ஆப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்து ஓய்வு பெற்றவர் தூய மணி (68). இவர் சென்னையில் குடியிருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக, தேனி மாவட்டம் கம்பத்தில் 10 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இதனை கம்பத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் மூலம் விற்க முயற்சித்தார். இதை வாங்குவதற்காக விவசாயி ராஜசேகர் 2021ல் முன்பணமாக ரூ.49 லட்சத்தை தூயமணியிடம் கொடுத்தார். முருகனுக்கு ரூ.1 லட்சம் கொடுத்தார். அதன்படி தூயமணி தென்னந்தோப்புக்கான கிரைய உடன்படிக்கை பத்திரத்தை ராஜசேகருக்கு எழுதிக் கொடுத்தார்.

இதில் சாட்சியாக அவரது மகள் டாக்டர் ஹேண்டி பிரியதர்ஷனியும் கையொப்பமிட்டார். தொடர்ந்து பல தவணைகளாக ராஜசேகர் ரூ.1.40 கோடியை அனுப்பி வைத்தார். பின்னர் பத்திரப்பதிவு செய்து தர கேட்டபோது உறவினர் மக்கள்அன்பனின் (44) தூண்டுதலால், பத்திர பதிவு செய்யாமல் தூயமணி சென்னை திரும்பினார். இந்நிலையில் பத்திரம் காணாமல் போனதாக கம்பம் காவல்நிலையத்தில் தூயமணி புகார் செய்தார். இதற்கிடையில் தூயமணி, அவரது மகள் ஹேண்டி பிரியதர்ஷினி, உறவினர் மக்கள் அன்பன் ஆகியோர் ரூ.1.90 கோடி மோசடி செய்ததாக கூறி, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ராஜசேகர் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து தூயமணி, மக்கள் அன்பனை நேற்று கைது செய்தனர்.

The post தென்னந்தோப்பை விற்பதாக ரூ1.90 கோடி மோசடி செய்த மாஜி துணைவேந்தர் கைது appeared first on Dinakaran.

Tags : Vice Chancellor ,Theni ,Bharat Institute ,Chennai Selaiyur ,Dinakaran ,
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்